ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சலுகைகளுடன் விற்பனைக்கு வந்துள்ள இந்த மாடல், சக்திவாய்ந்த பேட்டரி, அதிவேக சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் முதல் டர்போ சீரிஸ் ஸ்மார்ட்போனாக அறிமுகமானுள்ள ரெட்மி டர்போ 5, 6.59 இன்ச் அளவிலான 1.5K AMOLED திரையுடன் வருகிறது. மேலும் 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு ஆகியவை இதில் உள்ளன.
மேலும், இந்த போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 50MP கேமரா, OIS ஆதரவு, 8MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனால், தரமான புகைப்படங்களை எடுக்கும் வகையில் இந்த கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக 7540mAh திறன் கொண்ட மாபெரும் பேட்டரி இடம்பெற்றுள்ளது. அதனுடன் 100W ஹைப்பர்சார்ஜ் வசதி மற்றும் 27W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற சாதனங்களையும் சார்ஜ் செய்ய முடியும்.
விலை விவரங்களைப் பொறுத்தவரை, 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.37,999 விலையிலும், 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.40,999 விலையிலும் அறிமுகமாகியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
