கூகுள் நிறுவனம் தனது கூகுள் டிரைவ் செயலியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஆவண ஸ்கேனர் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ரசீதுகள், ஒப்பந்தங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை இனி மொபைல் மூலமே மிக எளிதாகவும், தரமாகவும் டிஜிட்டல் கோப்புகளாக மாற்ற முடியும்.
இந்த புதிய வசதி முதற்கட்டமாக 8 ஜி.பி. ரேம் (RAM) கொண்ட ஆண்ட்ராய்டு போன்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த AI அம்சங்கள் அனைத்தும் இணைய வசதி (Internet) இல்லாமலேயே போனுக்குள்ளேயே செயல்படும். இதனால் உங்கள் தனிப்பட்ட ஆவணங்கள் கிளவுட் தளத்திற்கு அனுப்பப்படாமல் பாதுகாப்பாக இருக்கும்.
புதிய அப்டேட்டில் உள்ள சிறப்பம்சங்கள்:
பல பக்கங்களை ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்து, அவற்றை தானாகவே ஒரே PDF கோப்பாக மாற்றும் வசதி இதில் உள்ளது.
மங்கலாக அல்லது தெளிவில்லாமல் இருக்கும் பக்கங்களை AI கண்டறிந்து, அவற்றுக்கு பதிலாக மிகத் தெளிவான படங்களை தானாகவே தேர்வு செய்யும்.
தெரியாமல் ஒரே பக்கத்தை இரண்டு முறை ஸ்கேன் செய்துவிட்டால், இந்தத் தொழில்நுட்பம் அதை அடையாளம் கண்டு தேவையற்ற நகலை நீக்கிவிடும்.
