இனி தவறான கணக்குகளுக்கு பணம் செல்லாது : யுபிஐ பரிவர்த்தனையில் புதிய வசதி

நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை செல்பேசி எண் அல்லது யுபிஐ முகவரியை மட்டும் வைத்து பணம் அனுப்பும் நடைமுறை இருந்தது. இதனால் சில நேரங்களில் தவறான நபர்களுக்கு பணம் அனுப்பப்படுவது அல்லது மோசடி சம்பவங்கள் நடைபெறுவது போன்ற பிரச்சனைகள் எழுந்தன.

இதனை சரிசெய்யும் வகையில், இனி பணம் அனுப்பும் முன்பாக பெறுநரின் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பெயர் பயனரின் திரையில் தெளிவாக காண்பிக்கப்படும். அதன் பிறகே ரகசிய எண் பதிவு செய்து பணத்தை அனுப்ப முடியும்.

இந்த புதிய வசதி மூலம் பணம் அனுப்பும் நபர், பணம் யாருக்கு செல்கிறது என்பதை உறுதி செய்த பிறகே பரிவர்த்தனையை நிறைவு செய்ய முடியும். இதனால் தவறுதலாக வேறு கணக்குகளுக்கு பணம் அனுப்பும் அபாயம் குறையும்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் முக்கிய நடவடிக்கையாக இந்த புதிய பாதுகாப்பு அம்சம் பார்க்கப்படுகிறது.

Related Post

Latest News