ஐபோன் விலையை 11% வரை உயர்த்திய ஆப்பிள் நிறுவனம்

ஜப்பான் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் விலையை 11 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு iPhone 16 முதல் iPhone 17 Pro Max வரை பல மாடல்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இந்தியாவிலும் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜப்பானில் எந்த iPhone மாடல்களின் விலை உயர்ந்தது?

iPhone 17 Pro Max – 194,800 யென்னில் இருந்து 214,800 யென்னாக உயர்வு
iPhone 17 Pro – 179,800 யென்னில் இருந்து 194,800 யென்னாக உயர்வு.
iPhone Air – 159,800 யென்னில் இருந்து 177,800 யென்னாக உயர்வு
iPhone 17 – 129,800 யென்னில் இருந்து 142,800 யென்னாக உயர்வு.
iPhone 17e – 99,800 யென்னில் இருந்து 107,800 யென்னாக உயர்வு.
iPhone 16 – 114,800 யென்னில் இருந்து 124,800 யென்னாக உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு என்ன காரணம்?

அமெரிக்க டாலருக்கு எதிராக ஜப்பானிய யென்னின் மதிப்பு குறைந்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களின் செலவு அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, உலகளவில் மெமரி சிப் பற்றாக்குறை மற்றும் மின்னணு உதிரிபாகங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஆப்பிளின் உற்பத்தி செலவையும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் iPhone விலை உயரும் வாய்ப்பு உள்ளதா?

தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் iPhone மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் ஆப்பிள் அறிவிக்கவில்லை. இருப்பினும், தயாரிப்பு செலவு அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Post

Latest News