அம்மா உணவகத்தில் நடக்கும் நூதன மோசடி : வெளியான அதிர்ச்சி தகவல்

அம்மா உணவகம் திட்டம் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. முதலில் இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் சில ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் தமிழகத்தின் மிகவும் பிரபலமான மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களும் இதை சமூக நல மாதிரியாகப் பாராட்டியுள்ளனர்.

இந்த சூழலில், அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள் சில தனியார் ஹோட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் இட்லிகள், பின்னர் வெளியில் ரூ.10 வரை விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

அம்மா உணவக விதிகளின்படி, உணவை பார்சலாக வழங்கக்கூடாது; அங்கு அமர்ந்து சாப்பிடுவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால், இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாமல், பார்சல் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, உண்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Related Post

Latest News