ஃபுட் ரிவ்யூ செய்யும் யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை கட்டுப்பாடு

யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஃபுட் ரிவ்யூ செய்யும் வீடியோக்களுக்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. தெருவோரக் கடைகள் முதல் ஐந்து நட்சத்திர உணவகங்கள் வரை தேடிச் சென்று யூடியூபர்கள் வழங்கும் விமர்சனங்களை நம்பி லட்சக்கணக்கான பொதுமக்கள் அந்த உணவகங்களுக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உணவு பாதுகாப்புத் துறை யூடியூபர்களுக்குப் புதிய அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சாதாரண ரோட்டோர கடைகளில் ரிவியூவ் போட்டு, அதை நம்பி.. மக்கள் அந்த கடையில் போய் சாப்பிட்டால் அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? என்கிற நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

உணவு பாதுகாப்புத் துறை அதிரடி கட்டுப்பாடு

உணவு பாதுகாப்புத் துறையின் புதிய அறிவுறுத்தலின்படி, இனி யூடியூபர்கள் எந்தவொரு உணவகத்திற்குச் சென்றாலும் பின்வரும் விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

தாங்கள் விமர்சனம் செய்யவிருக்கும் உணவகம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தகுந்த உரிமம் அல்லது அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.

உணவகத்தின் உள் அலங்காரத்தையோ, வண்ணமயமான விளக்குகளையோ மட்டும் காட்டி ஏமாற்றக் கூடாது. உணவுகள் தூய்மையான முறையில் தயாரிக்கப்படுகின்றனவா, சமையல் மாஸ்டர்கள் மற்றும் ஊழியர்கள் உரியத் தூய்மையைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை உன்னிப்பாகக் கவனித்துத் தங்கள் வீடியோக்களில் பதிவு செய்ய வேண்டும்.

உணவின் சுவைக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அந்த உணவகத்தின் ஒட்டுமொத்த சுகாதார நிலைகளுக்கும் கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News