பெட்ரோல் எத்தனால் சர்ச்சை: மீண்டும் வேகமெடுக்கும் டீசல் கார்கள் விற்பனை?

இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே மக்கள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி (CNG) கார்களை நோக்கி நகரத் தொடங்கினர். இதன் காரணமாக, டீசல் கார்களின் விற்பனை கணிசமாகக் குறைந்தது. ஆனால், சமீபகாலமாக பெட்ரோலில் எத்தனால் கலப்பது தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் காரணமாக, கார் வாங்குபவர்களின் கவனம் மீண்டும் டீசல் கார்கள் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளது.

எத்தனால் சர்ச்சை என்ன?

பெட்ரோலில் E20 எத்தனால் கலப்பும் நுகர்வோர் புகார்களும் மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், சாதாரண பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவந்தது. அண்மையில், இன்னும் ஒரு படி மேலே போய் 85% வரை எத்தனால் கலந்த E85 எரிபொருளையும் சில முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த எத்தனால் கலப்பால் வாகன ஓட்டிகள் பல நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும்போது வாகனங்களின் மைலேஜ் 3% முதல் 6% வரை குறைவதாகப் புகார்கள் எழுந்தன.

இதையும் படிங்க : பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதால் வாகன என்ஜின் சேதமடையுமா?

எத்தனால் எளிதில் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால், குறிப்பாக ஏப்ரல் 2023-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய பெட்ரோல் கார்களின் இன்ஜினில் உள்ள ரப்பர் ஹோஸ்கள், கேஸ்கெட்டுகள் மற்றும் ஓ-ரிங்குகள் சீக்கிரமே சேதமடைய வாய்ப்புள்ளதாக வாகன வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், மைலேஜ் குறைந்தாலும் கூட, பெட்ரோலின் விலையில் எந்தக் குறைப்பும் செய்யப்படாதது நுகர்வோரை அதிருப்தியடையச் செய்துள்ளது.

டீசல் கார்களை தேர்வு செய்யும் மக்கள்

பெட்ரோல் இன்ஜின்களில் எத்தனால் ஏற்படுத்தி வரும் இத்தகைய தலைவலிகளிலிருந்து தப்பிக்க தற்போது, டீசல் கார்களை தேர்வு செய்ய தொடங்கியுள்ளனர். ஏனென்றால், டீசலில் எத்தனால் கலக்கப்படுவதில்லை. இதனால் இன்ஜின் துருப்பிடித்தல், பாகங்கள் சேதமடைதல் போன்ற பிரச்சனைகள் டீசல் கார்களுக்கு ஏற்படுவதில்லை.

டீசல் வாகனங்கள் பொதுவாகவே பெட்ரோல் கார்களை விட அதிக மைலேஜ் தரும். நீண்ட தூரப் பயணங்களுக்கு இப்போதும் டீசல் கார்களே சிறந்த தேர்வாக உள்ளன. முறையாகப் பராமரித்தால், டீசல் இன்ஜின்கள் பெட்ரோல் இன்ஜின்களை விட அதிக ஆண்டுகள் மற்றும் அதிக கிலோமீட்டர்கள் தடையின்றி உழைக்கக் கூடியவை.

இதையும் படிங்க : ஒருமுறை சார்ஜ் செய்தால் 647 கி.மீ வரை மைலேஜ் : ஸ்கோடாவின் அதிரடி

டீசல் கார் வாங்கலாமா?

பெட்ரோல் எத்தனால் சர்ச்சைக்கு மத்தியில் டீசல் கார்கள் சிறந்த தேர்வாகத் இருந்தாலும், சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் விலை சந்தையில் சற்று அதிகம். வரவிருக்கும் BS7 விதிமுறைகள்: எதிர்காலத்தில் வரவிருக்கும் கடுமையான BS7 உமிழ்வு விதிகள் டீசல் கார்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

இருப்பினும், நீங்கள் தினசரி நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், மைலேஜ் குறைவு மற்றும் இன்ஜின் பழுது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் நீண்ட காலம் உழைக்கும் வாகனத்தைத் தேடுபவராகவும் இருந்தால், டீசல் கார் வாங்குவது ஒரு சிறந்த முடிவாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related Post

Latest News