ஒருமுறை சார்ஜ் செய்தால் 647 கி.மீ வரை மைலேஜ் : ஸ்கோடாவின் அதிரடி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் சர்வதேச வாகனச் சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்ட கார் நிறுவனங்கள் அதிநவீன மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா தனது புதிய ஃபிளாக்ஷிப் 7-சீட்டர் எலக்ட்ரிக் எஸ்யூவி காரான ‘PEAQ EV’ மாடலை உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த காரின் முக்கிய அம்சங்கள்

மிகப்பெரிய 7 இருக்கைகள் கொண்ட இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 647 கி.மீ வரை மைலேஜ் தரும். மொத்தம் 3 விதமான பேட்டரி மற்றும் எஞ்சின் வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.

இதில் உள்ள அதிவேக DC சார்ஜிங் வசதி மூலம் வெறும் 28 நிமிடங்களில் 80% சார்ஜ் செய்ய முடியும். இங்கிலாந்தில் அறிமுகமாகியுள்ள இந்த கார் 2027 ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

91 kWh பேட்டரி கொண்ட பிரீமியம் மாடல்களில் 199 kW DC அதிவேக சார்ஜிங் (Fast Charging) தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரின் பேட்டரியை 10 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காடு வரை சார்ஜ் செய்ய வெறும் 28 நிமிடங்களே போதுமானது.

ஸ்கோடா PEAQ EV: வேரியண்டுகளும் மைலேஜ் விவரங்களும்

PEAQ 60: இந்த ஆரம்பகட்ட மாடலில் 63 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 459 கி.மீ தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டது.

PEAQ 90x (AWD): இந்த ஆல்-வீல் டிரைவ் மாடலில் 91 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 613 கி.மீ வரை மைலேஜ் வழங்கும்.

PEAQ 90: இந்த மாடல்தான் இருப்பதிலேயே அதிக மைலேஜ் தரக்கூடியது. இதில் உள்ள 91 kWh பேட்டரி மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 647 கி.மீ தூரம் வரை தடையின்றிப் பயணிக்கலாம் என ஸ்கோடா நிறுவனம் சான்றளித்துள்ளது.

எப்போது விற்பனைக்கு வரும்?

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு நிலவும் பெரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, இந்த காரை அடுத்த ஆண்டிற்குள் (2027) இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன் விலை ரூ.60 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Related Post

Latest News