மராத்தி தெரியலைன்னா ஆட்டோவுக்கு லைசன்ஸ் கிடைக்காது : மகாராஷ்டிராவில் புது ரூல்ஸ்

மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்ஸி வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மராத்தி மொழி தெரியாத ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மராத்தி மொழி கட்டாயம்

மகாராஷ்டிரா அரசு கொண்டு வர உள்ள புதிய விதிகளின்படி, பயணிகளை ஏற்றிச் செல்லும் வர்த்தக வாகனங்களின் ஓட்டுநர்கள் மராத்தி மொழியில் தெரிந்திருக்க வேண்டும். இதில் ஆட்டோ ரிக்ஷாக்கள், டாக்ஸிகள் மற்றும் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்ட செயலி அடிப்படையிலான மோட்டார் கேப்கள் ஆகியவை அடங்கும்.

மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் கீழ் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய மோட்டார் வாகன திருத்த விதிகள் 2026 அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுநர்களுக்கு முதலில் ஒரு மாதம் அவகாசம்

மராத்தி மொழி தெரியாத ஆட்டோ அல்லது டாக்ஸி ஓட்டுநர்களுக்கு முதலில் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். அந்த காலத்திற்குள் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மாத கால அவகாசம் முடிந்த பிறகும் ஓட்டுநர் மொழியை கற்றுக்கொள்ளவில்லை என்றால், அவரது ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.

தொடர்ந்து விதியை மீறினால் நிரந்தர ரத்து

மூன்று மாத உரிமம் இடைநிறுத்த காலத்திற்குப் பிறகும் ஓட்டுநர் மராத்தி மொழி தெரியவில்லை என்றால், அவரது ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News