கூகுள் அசிஸ்டண்ட் சேவை நிறுத்தம் ; ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கடந்த 10 ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு பயனர்களின் குரல் உதவியாளராக இருந்து வந்த கூகுள் அசிஸ்டண்ட் சேவையை அடுத்த மாதம் முதல் நிறுத்த உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் Android ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் Wear OS ஸ்மார்ட்வாட்ச்களுக்கு பொருந்தும்.

கூகுள் அனுப்பியுள்ள மின்னஞ்சல் அறிவிப்பின்படி, 2026 செப்டம்பர் 4 முதல் கூகுள் அசிஸ்டண்ட் படிப்படியாக நீக்கப்படும். அனைத்து பயனர்களுக்கும் ஒரே நாளில் மாற்றம் வராது. உலகம் முழுவதும் இந்த மாற்றம் முழுமையாக நிறைவடைய சில வாரங்கள் ஆகலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒருமுறை மாற்றம் செய்யப்பட்ட பிறகு, பழைய கூகுள் அசிஸ்டண்ட் -ஐ மீண்டும் பயன்படுத்தவோ அல்லது அதற்கு திரும்பவோ முடியாது என்றும் கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது.

கூகுள் அசிஸ்டண்ட்-க்கு பதிலாக ஜெமினி ஏ.ஐ

கூகுள் கடந்த சில ஆண்டுகளாகஜெமினி ஏ.ஐ-க்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கூகுள் அசிஸ்டண்ட்-க்கு புதிய அம்சங்களை சேர்ப்பதற்குப் பதிலாக, ஜெமினி ஏ.ஐ-யை டிஜிட்டல் உதவியாளராக நிறுவனம் முன்னிறுத்தியுள்ளது.

இதன் மூலம் பயனர்கள், இயல்பான மொழியில் கேள்விகள் கேட்கலாம். நீளமான உரையாடல்களை மேற்கொள்ளலாம். தகவல்களை சுருக்கமாக பெறலாம். எழுதுதல், திட்டமிடல் உள்ளிட்ட AI அம்சங்களை பயன்படுத்தலாம்.

Google Assistant எப்போது அறிமுகமானது?

Google Assistant முதன்முதலில் 2016 மே 18 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது AI தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னிட்டு, Google தனது கவனத்தை முழுமையாக Gemini AI-க்கு மாற்றியுள்ளது.

Related Post

Latest News