இந்தியர்கள் அதிக நேரம் செலவிடும் செயலி எது? புதிய ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் எந்த மொபைல் செயலிகளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது குறித்த புதிய ஆய்வு வெளியாகியுள்ளது.

நிதிச் சந்தை ஆய்வை மேற்கொள்ளும் பேங்க் ஆப் அமெரிக்காவின் ஆராய்ச்சி பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியர்கள் அதிக நேரத்தை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளில் செலவிடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராம்மில் அதிக நேரம்

ஆய்வின்படி, இந்திய ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மாதத்திற்கு சராசரியாக 49 மணி நேரம் 42 நிமிடங்கள் Instagram-ஐ பயன்படுத்துகின்றனர். இது பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, யூடியூப் செயலியில் மாதத்திற்கு 47 மணி நேரம் 23 நிமிடங்கள் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறும்பட வீடியோக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கல்வி சார்ந்த உள்ளடக்கங்கள் மற்றும் நேரலை நிகழ்ச்சிகள் போன்றவை இந்த பயன்பாட்டை அதிகரிக்கச் செய்கின்றன.

பேஸ்புக் மற்றும் எக்ஸ்

சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் மற்றும் எக்ஸ் ஆகியவற்றிலும் இந்தியர்கள் குறிப்பிடத்தக்க நேரத்தை செலவிடுகின்றனர். பேஸ்புக்கில் மாதத்திற்கு சராசரியாக 24 மணி நேரம் 45 நிமிடங்கள். எக்ஸ் தளத்தில் மாதத்திற்கு சராசரியாக 13 மணி நேரம் 30 நிமிடங்கள் செலவிடுகின்றனர். செய்திகள், அரசியல் விவாதங்கள், பொழுதுபோக்கு போன்ற காரணங்களால் இந்த தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

WhatsApp மற்றும் OTT

அன்றாட தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் WhatsApp செயலியிலும் இந்தியர்கள் மாதத்திற்கு சராசரியாக 18 மணி நேரம் 49 நிமிடங்கள் செலவிடுகின்றனர்.

அதேபோல், திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் இணைய நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக பயன்படுத்தப்படும் OTT தளங்களிலும் மக்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். மாதத்திற்கு சராசரியாக 10 மணி நேரம் முதல் 22 மணி நேரம் வரை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News