மின்சார கார் சந்தையில் டாடா மீண்டும் முன்னிலை! ஜூலை மாத விற்பனையில் புதிய சாதனை

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் 2026 ஜூலை மாதத்தில் புதிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக மின்சார வாகனங்களின் விற்பனை இரு இருமடங்காக அதிகரித்துள்ளது.

ஜூலை 2026-ல் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை சேர்த்து மொத்தமாக 63,760 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 40,175 ஆக இருந்தது. இதன் அடிப்படையில் 59 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் விற்பனை அதிகரிப்பு

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜூலை 2026-ல் மட்டும் 62,611 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது 58 சதவீத உயர்வாகும். SUV மற்றும் மின்சார கார் பிரிவுகளில் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவை, புதிய மாடல்களின் வரவேற்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

ஏற்றுமதியிலும் முன்னேற்றம்

உள்நாட்டு சந்தை மட்டுமல்லாமல், சர்வதேச சந்தையிலும் டாடா மோட்டார்ஸ் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜூலை மாதத்தில் நிறுவனம் 1,149 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடும்போது இது 76 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்திய EV சந்தையில் டாடாவின் முக்கிய பங்கு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலரும் மின்சார வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, டாடா மோட்டார்ஸ் பல்வேறு மின்சார கார் மாடல்களை அறிமுகப்படுத்தி சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.

Related Post

Latest News