ஊபர் நிறுவனம், அடுத்த சில ஆண்டுகளில் 1.2 லட்சம் டிஓட்டுநர் இல்லாத கார்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.95,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, எதிர்கால நகர்ப்புற போக்குவரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், ஊபர் பணிபுரியும் லட்சக்கணக்கான மனித டிரைவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாரா கோஸ்ரோஷாஹி கூறுகையில், உலகின் மிகப்பெரிய வணிக தளமாக ஊபர் -ஐ உருவாக்குவதே நிறுவனத்தின் இலக்கு என்று தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் வலுவான நிதிநிலை காரணமாக இந்த முதலீட்டை மேற்கொள்ள முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
