டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களமிறங்கும் கியா சொரெண்டோ!

கியா நிறுவனம் இந்தியாவில் தனது SUV வரிசையை மேலும் வலுப்படுத்தும் வகையில், தனது புதிய Sorento SUV-யை வரும் செப்டம்பர் 4 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. இது இந்திய சந்தையில் Kia அறிமுகப்படுத்தும் முதல் Strong Hybrid SUV என்பதால், வாடிக்கையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை

கியா சொரெண்டோ – வின் ஆரம்ப விலை சுமார் ரூ.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கியா சொரெண்டோ இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Strong Hybrid பெட்ரோல் இன்ஜின்

முக்கிய அம்சமாக 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் Strong Hybrid இன்ஜின் வழங்கப்படலாம். சர்வதேச சந்தையில் விற்பனையாகும் மாடலின் அடிப்படையில், இந்த இன்ஜின் சுமார் 238 bhp திறனையும் 380 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதனுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படும்.

2.2 லிட்டர் டீசல் இன்ஜின்

Kia Carnival-ல் பயன்படுத்தப்படும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் Sorento-விலும் கிடைக்கலாம். இந்த இன்ஜின் 202 bhp சக்தி மற்றும் 441 Nm டார்க் வழங்கும். இந்தியாவில் இது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வரக்கூடும்.

இந்திய சந்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்குமா?

SUV சந்தையில் Hybrid வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கியா சொரெண்டோ அறிமுகம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சக்திவாய்ந்த Hybrid தொழில்நுட்பம், 3-வரிசை இருக்கை வசதி, பிரீமியம் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் வரும் இந்த மாடல், Fortuner மற்றும் Kodiaq போன்ற பிரபல SUV-களுக்கு வலுவான போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

Latest News