கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி சமீபத்தில் முதலமைச்சர் விஜய் உத்தரவுகளை நேரில் வழங்கி இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பிரபாகரன் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
