அடையாளம் தெரியாத நபரால் தொடர் தொல்லை : சென்னை மேயர் பிரியா புகார்

சென்னை மாநகர மேயர் பிரியாவுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேயர் பிரியா அளித்த புகாரில், கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத ஒருவர் தனக்கு பல்வேறு வழிகளில் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது தனக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சென்னையில் நாளை (28.07.2026) மின்தடை செய்யப்படும் பகுதிகள்

புகாரின் பெயரில் காவல்துறை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையின் முடிவில் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேயரின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post

Latest News