உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு… 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் காயம்

அமெரிக்காவில், வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரில் நடைபெற்ற பிரபலமான உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

சியாட்டில் போலீசார் வெளியிட்ட தகவலின்படி, சம்பவத்தில் இரண்டு தரப்பினர் ஒருவரை ஒருவர் நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்றொரு சந்தேகநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் பொதுமக்கள் பதிவு செய்த வீடியோக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.5 லட்சம் பேர் இந்த விழாவில் பங்கேற்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய பெரிய பொதுநிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது அமெரிக்காவில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Related Post

Latest News