மாலை நேரத்தில் சூடாக ஒரு கப் டீ அல்லது காபியுடன் பக்கோடா சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமானது. ஆனால், கடைகளில் கிடைக்கும் பக்கோடாக்களில் அதிக எண்ணெய் மற்றும் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படலாம். அதற்குப் பதிலாக, காய்கறிகள் மற்றும் சத்தான தானியங்களை கொண்டு வீட்டிலேயே பக்கோடா தயாரித்தால், சுவையாகவும் ஆரோக்கியமும் கிடைக்கும். அந்த வகையில், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய 6 வகையான சத்தான பக்கோடா ரெசிபிகளை பார்க்கலாம்.
- பாலக்கீரை பக்கோடா
இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பாலக்கீரையை வைத்து சுவையான பக்கோடா செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய பாலக்கீரை – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
பச்சை மிளகாய் – 4
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை
அனைத்து பொருட்களையும் சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து, சூடான எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- புடலங்காய் பக்கோடா
புடலங்காயில் கலோரி குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக அமையும்.
தேவையான பொருட்கள்
மெல்லியதாக நறுக்கிய புடலங்காய்
கடலை மாவு
அரிசி மாவு
மஞ்சள் தூள்
மிளகாய்த் தூள்
சீரகத்தூள்
உப்பு
செய்முறை
மசாலா மாவை தயாரித்து, புடலங்காய் துண்டுகளை அதில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- ஆப்பிள் பக்கோடா
இனிப்பு மற்றும் காரம் கலந்த வித்தியாசமான சுவையை விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் – 1
சாமை மாவு – ½ கப்
மிளகு தூள்
இஞ்சி துருவல்
உப்பு
செய்முறை
ஆப்பிளுடன் மற்ற பொருட்களை கலந்து சிறு உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- நெல்லிக்காய் பக்கோடா
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காயை வைத்து சுவையான பக்கோடா தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
துருவிய நெல்லிக்காய்
கடலை மாவு
கோதுமை மாவு
அரிசி மாவு
மிளகாய்த் தூள்
உப்பு
செய்முறை
அனைத்து பொருட்களையும் கலந்து மாவாக செய்து, சிறு சிறு பக்கோடாக்களாக எண்ணெயில் பொரிக்கவும்.
- அவல் பக்கோடா
அவல் மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்யப்படும் இந்த பக்கோடா மொறுமொறுப்பாகவும் சத்தானதாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
அவல்
கடலை மாவு
அரிசி மாவு
வறுத்த வேர்க்கடலை
மிளகாய்த் தூள்
பெருங்காயம்
உப்பு
செய்முறை
அனைத்து பொருட்களையும் கலந்து மாவாக தயாரித்து, எண்ணெயில் பக்கோடாவாக பொரித்தெடுக்கவும்.
- மக்காச்சோள பக்கோடா
மக்காச்சோளம், புதினா மற்றும் மசாலா சேர்த்து செய்யப்படும் இந்த பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்
வேகவைத்த மக்காச்சோளம்
புதினா
அரிசி மாவு
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
செய்முறை
அனைத்து பொருட்களையும் கலந்து பக்கோடா மாவு தயாரித்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
ஆரோக்கியமாக சாப்பிட சில குறிப்புகள்
ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம். அதிக எண்ணெயை உறிஞ்சாமல் இருக்க மாவின் பதத்தை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். பொரித்த பக்கோடாவை டிஷ்யூ பேப்பரில் வைத்து கூடுதல் எண்ணெயை உறிஞ்சிய பிறகு பரிமாறலாம்.
தக்காளி சட்னி, புதினா சட்னி அல்லது தயிர் டிப் உடன் பரிமாறினால் சுவை மேலும் அதிகரிக்கும். வீட்டிலேயே தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பக்கோடாக்கள், மாலை நேர சிற்றுண்டிக்கு சுவையுடன் சத்தையும் சேர்க்கும்.
குறிப்பு: பக்கோடா எண்ணெயில் பொரிக்கப்படும் உணவு என்பதால், அளவோடு சாப்பிடுவது நல்லது. இதய நோய், நீரிழிவு அல்லது உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் குறைந்த எண்ணெயில் தயாரித்து சாப்பிடலாம்.
