ஆரோக்கிய உணவுப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள பழங்களில் ஒன்று ப்ளூபெர்ரி. சிறிய அளவில் இருந்தாலும், இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காரணமாக உலகம் முழுவதும் பலர் விரும்பி சாப்பிடுகின்றனர்.
ப்ளூபெர்ரியில் உள்ள முக்கிய சத்துக்கள்
100 கிராம் ப்ளூபெர்ரியில் வைட்டமின் C, வைட்டமின் K, மாங்கனீஸ், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
உடல் எடை குறைக்க உதவுமா?
ப்ளூபெர்ரியில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் குறைந்த கலோரி கொண்ட பழமாக இருப்பதால் ஆரோக்கியமான சிற்றுண்டியாக பயன்படுத்தலாம். இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடும் ஆசையும் குறைக்க உதவலாம். இருப்பினும் ப்ளூபெர்ரி மட்டும் சாப்பிட்டால் உடல் எடை குறையாது. சரியான உணவுமுறை மற்றும் தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : இனிப்பான விஷம்., கூல்ட்ரிங்க்ஸில் மறைந்திருக்கும் ஆபத்துகள்
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
ப்ளூபெர்ரியை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். ஆனால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். உளர் ப்ளூபெர்ரி வாங்கும்போது அதில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். “No Added Sugar” என்று குறிப்பிடப்பட்ட தயாரிப்புகளைத் தேர்வு செய்வது நல்லது.
அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?
அளவுக்கு மீறி ப்ளூபெர்ரி சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று உப்புசம், வாயு தொல்லை, வயிற்றுப்போக்கு, இரத்த சர்க்கரை உயர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுவாக ஒரு நாளைக்கு ½ கப் அல்லது 15 முதல் 20 கிராம் ப்ளூபெர்ரி எடுத்துக்கொள்வது நல்லது.
இதையும் படிங்க : தினமும் ஒரு வாழைப்பழத்தை இந்த நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?
எப்போது சாப்பிடுவது நல்லது?
காலை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது சிறந்தது. ஓட்ஸ், தயிர் அல்லது பழச்சலாட்டில் கலந்து சாப்பிடலாம். ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக பயன்படுத்தலாம். இரவு நேரத்தில் அதிக அளவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
யாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?
உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள், அளவோடு பழங்களை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகள், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்புபவர்கள், மூளை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த விரும்புபவர்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை விரும்புபவர்களுக்கு ப்ளூபெர்ரி ஒரு சிறந்த பழமாக கருதப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)
