அரசு ஊழியர்கள் மதிய உணவுக்காக வீட்டிற்கு செல்லக்கூடாது – அரசு ஊழியர்களுக்கு புது ரூல்ஸ்

புதுச்சேரி அரசுத் துறைகளில் எரிபொருள் மற்றும் மின்சாரச் சிக்கனத்தை உறுதி செய்ய பல்வேறு புதிய வழிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அவசியமற்ற பயணங்கள் மற்றும் ஆய்வு சுற்றுப்பயணங்களை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு வாகனங்களின் பயன்பாட்டிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்திற்குச் செல்லும் அதிகாரிகள் வாகனங்களைப் பகிர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அலுவலகப் பயணங்களுக்கு இயன்றவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் அரசு ஊழியர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மின்சாரச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில், பயன்படுத்தப்படாத நேரங்களில் விளக்குகள், குளிரூட்டும் சாதனங்கள், கணினிகள் உள்ளிட்ட மின்சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மதிய உணவு நேரத்தில் அதிகாரிகளும் பணியாளர்களும் தங்கள் வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, வீட்டிலிருந்தே உணவை எடுத்துச் வந்து அலுவலகத்திலேயே உணவருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

Latest News