இரவு 7 மணிக்குப் பிறகு இந்த 5 உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏன் தெரியுமா?

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலர் இரவு உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இரவு நேரத்தில் சில வகை உணவுகளை எடுத்துக்கொள்வது உடலின் இயல்பான செரிமான செயல்பாட்டை பாதிக்கக்கூடும். குறிப்பாக 7 மணிக்குப் பிறகு கீழ்க்கண்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது என உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மட்டன் பிரியாணி

அதிக கொழுப்பு மற்றும் அதிக சக்தி அளிக்கும் உணவாக கருதப்படும் மட்டன் பிரியாணியை, இரவு நேரத்தில் சாப்பிடும்போது செரிமான பிரச்சனை ஏற்படும். இது உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதற்கும் வழிவகுக்கலாம்.

அதிக காரம் கொண்ட உணவுகள்

மிளகாய் மற்றும் பல்வேறு மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவுகள் இரவில் சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கலாம். மேலும் இது தூக்கத்தின் தரத்தையும் பாதிக்கக்கூடும்.

இதையும் படிங்க : தினமும் ஒரு வாழைப்பழத்தை இந்த நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

இனிப்பான உணவுகள்

இரவு உணவுக்குப் பிறகு இனிப்புகளை சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தி, அமைதியான தூக்கத்தை கெடுக்கக்கூடும். அதோடு மீண்டும் பசி உணர்வையும் தூண்டலாம்.

எண்ணெயில் பொரித்த உணவுகள்

பஜ்ஜி, வடை போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகள் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும். இதனை இரவு நேரங்களில் சாப்பிடும் போது வயிற்று அசௌகரியம் மற்றும் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கஃபீன் கொண்ட பானங்கள்

தேநீர், காபி போன்ற பானங்களில் உள்ள கஃபீன் உடலை விழிப்புடன் வைத்திருக்கும். இதனால் ஆழ்ந்த தூக்கம் குறைந்து, அடுத்த நாள் சோர்வு ஏற்படலாம்.

வேறு என்ன செய்யலாம்?

இரவு நேரத்தில் பசி ஏற்பட்டால் காய்கறி சேர்த்த கிச்சடி, வெதுவெதுப்பான பால், பேரீச்சம்பழம் அல்லது பாதாம் போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளைத் தேர்வு செய்வது நல்லது. இது உடலுக்கு தேவையான சத்துக்களையும் வழங்கும்.

Related Post

Latest News