எல்பிஜி-யை விடக் குறைந்த செலவுதான்.., சந்தைக்கு வரப்போகும் புதிய அடுப்பு..!

இந்தியாவில் மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, எத்தனால் மூலம் இயங்கும் புதிய சமையல் அடுப்பு தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த அடுப்பு எல்பிஜி சிலிண்டர்களை விட குறைந்த செலவில் சமையல் செய்ய உதவும் என தெரிவித்தார்.

இந்த புதிய அடுப்பு, எத்தனாலுடன் தண்ணீர் கலந்து தீ உருவாக்கும் முறையில் செயல்படுகிறது. முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு மாற்றாக பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தீர்வாக இருக்கும் என அவர் கூறினார்.

எல்பிஜிக்கு மாற்றாக எத்தனால் அடுப்புகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. குறைந்த செலவு மற்றும் குறைந்த மாசு காரணமாக இது எதிர்கால சமையல் எரிபொருளாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Post

Latest News