புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் புதிய 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் சந்தையில் புழக்கத்திற்கு வந்தன. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, ₹2000 நோட்டுகள் பெரும்பாலானவை வங்கிகளுக்கு திரும்பியிருந்தாலும், இன்னும் குறிப்பிடத்தக்க அளவு பொதுமக்களிடம் இருப்பது தெரியவந்துள்ளது.
2023 மே மாதத்தில் இந்த நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறும் நடவடிக்கையை RBI தொடங்கியது. அப்போது சுமார் ₹3.56 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் சந்தையில் இருந்தன. ஆனால் 2026 ஏப்ரல் இறுதி நிலவரப்படி, சுமார் ₹5,500 கோடி மதிப்புள்ள நோட்டுகள் இன்னும் வங்கிக்கு வரவில்லை.
RBI தரவுகளின்படி, மொத்தத்தில் 98.47% நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனால் இந்த நோட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தினசரி பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றை வங்கிக் கணக்கில் செலுத்துவது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்று உங்கள் கையில் ரூ.2000 நோட்டுகள் இருந்தால், நேரடியாக RBI வெளியீட்டு அலுவலகங்களுக்கு சென்று, வழக்கமான வங்கி நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நோட்டுகளை உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
அதேபோல், அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தின் மூலம் கூட இந்த நோட்டுகளை RBI அலுவலகங்களுக்கு அனுப்பலாம். தேவையான சரிபார்ப்பு முடிந்ததும், அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.


