ஐஸ் கிரீம் தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்களது உடல் சூட்டை தணிக்க ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை விரும்பி சாப்பிடுவது வழக்கம். இந்த சூழலை பயன்படுத்தி சில உற்பத்தியாளர்கள் பாதுகாப்பற்ற பொருட்களை சந்தையில் விற்பனை செய்யும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், மாவட்ட அளவில் செயல்படும் அதிகாரிகளுக்கு, ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பான உற்பத்தி நிறுவனங்களை நேரடியாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக இயற்கை சர்க்கரைக்கு பதிலாக செயற்கை இனிப்புகள், அதிக நிறமிகள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறதா என்பது தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : கோடைக்காலத்தில் தர்பூசணி சாப்பிடும்போது இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க

சுத்தமற்ற நீர் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் உரிம எண் போன்ற தகவல்கள் சரியாக பதிக்கப்பட்டுள்ளனவா என்பதும் சரிபார்க்கப்படுகிறது.

தவறுகளை செய்யும் உற்பத்தியாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சந்தையில் வாங்கும் பொருட்களின் தரம், லேபிள் விவரங்கள் மற்றும் பாதுகாப்பு குறியீடுகள் ஆகியவற்றை கவனமாக சரிபார்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Post

Latest News