முடி வளர்ச்சிக்கு உதவும் பூசணி விதை எண்ணெய் : எப்படி பயன்படுத்தனும்?

பூசணிக்காய் விதை எண்ணெய் முடி உதிர்வை குறைத்து வளர்ச்சியை தூண்டும் இயற்கை எண்ணெயாக கருதப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துகள் DHT ஹார்மோனை கட்டுப்படுத்த உதவலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பூசணி விதையில் ஏராமான வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து, வைட்டமின் இ, மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய சத்துகள் நிறைவாக உள்ளன.

பூசணிக்காய் விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் E, ஜிங்க் (Zinc), ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ளன. இவை அனைத்தும் முடி வேர்களை வலுப்படுத்தும். முடி வளர்ச்சியை தூண்டும்.

இதையும் படிங்க : எந்த வகை திராட்சை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதுன்னு தெரியுமா?

சில மருத்துவ ஆய்வுகளில், பூசணிக்காய் விதை எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டபோது, முடி அடர்த்தி அதிகரித்தது. முடி உதிர்வு குறைந்தது. குறிப்பாக ஆண்களில் முடி வளர்ச்சி மேம்பட்டது.

பூசணி விதை எண்ணை தயாரிக்கும் முறை

தேவையானவை:

2 டீஸ்பூன் பூசணி விதை.
1 கப் தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணெய்.

செய்முறை

பூசணி விதைகளை லேசாக நசுக்கவும். எண்ணெயை குறைந்த தீயில் சூடாக்கவும்.நசுக்கிய விதைகளை சேர்க்கவும். 5–10 நிமிடங்கள் மெதுவாக சூடாக்கவும். ஆறவைத்து வடிகட்டி பாட்டிலில் சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை

எண்ணெயை லேசாக வெதுவெதுப்பாக சூடாக்கவும். உச்சந்தலையில் மெதுவாக 5 நிமிடம் மசாஜ் செய்யவும்.
1–2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைத்திருக்கலாம். மைல்டு ஷாம்பூ கொண்டு கழுவவும். இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தால் 1 அல்லது 2 மாதங்களில் மெலிந்த தலைமுடி பகுதிகளில் புதிய முடி வளர்ச்சியை காண முடியும்.

Latest News