ஜனநாயகன் திரைப்படத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக படம் வெளியாகவில்லை. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு திரைப்படமும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கோவையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் ஜனநாயகன் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளம் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கவும் இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

RELATED NEWS

Latest News