கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறதாம்., மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவர்களுக்கு எச்சரிக்கை

இன்றைய வாழ்க்கை முறையில், தவறான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் மனிதர்களுக்கு கெட்ட கொழுப்பு (LDL) அதிகரிப்பது சாதாரணமாகி வருகிறது. இதனை குறைக்க சிலர் தங்களாகவே மருந்துகள் மற்றும் சப்பிளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது வழக்கமாகி வருகிறது.

குறிப்பாக, ஓமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ள மீன் எண்ணெய் (cod liver oil) மாத்திரைகள் கெட்ட கொழுப்பை குறைக்கும் என்ற நம்பிக்கையில், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், 2026ஆம் ஆண்டில் வெளியான புதிய மருத்துவ வழிகாட்டுதல்கள் இந்த நம்பிக்கைக்கு சந்தேகம் எழுப்பியுள்ளது.

நிபுணர்கள் கூறுவதாவது, மருந்தகங்களில் கிடைக்கும் மீன் எண்ணெய் மாத்திரைகள் LDL கொலஸ்ட்ராலை குறைப்பதில் குறிப்பிடத்தக்க பயன் அளிக்காது.

இதையும் படிங்க : பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் அவசர கருத்தடை மாத்திரைகள்

மீன் எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு சில நன்மைகள் அளித்தாலும், கெட்ட கொழுப்பான LDL அளவை குறைப்பதில் அது போதுமானதாக இல்லை. மேலும், சில ஆய்வுகள் காட்டுவது என்னவென்றால், சிலருக்கு இந்த மாத்திரைகள் LDL அளவை கூட அதிகரிக்கக்கூடும்.

எனவே, LDL கொலஸ்ட்ராலை குறைக்க மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதோடு, வாழ்க்கை முறையிலும் மாற்றங்கள் அவசியம். தினசரி காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து அதிகமான உணவுகளை சேர்க்க வேண்டும். மேலும், தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாகும்.

மொத்தத்தில், சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனையுடன் சரியான சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவது மட்டுமே பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாகும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)

RELATED NEWS

Latest News