ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்த முக்கிய குற்றவாளிகள் கைது

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக படம் வெளியாகவில்லை. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு திரைப்படமும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கோவையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் ஜனநாயகன் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், இணையத்தில் ஜனநாயகன் படத்தை லீக் செய்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயகன் உதவி எடிட்டர் எடிட்டிங் ஸ்டூடியோவில் நுழைந்து படத்தை திருடியது தெரிய வந்துள்ளது.

RELATED NEWS

Latest News