பழம்பெரும் பின்னணி சினிமா பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் காலமானார். அவருக்கு வயது 92.
மும்பையில் உள்ள கேண்டி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் காலமானார்.
1933-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி பிறந்த ஆஷா போஸ்லே, தனது 10-வது வயதில், அதாவது 1943-ஆம் ஆண்டில் பாடத் தொடங்கினார். இதுவரை ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
இசையில் அவரது பங்களிப்பை போற்றும் வகையில் தாதாசாஹேப் பால்கே விருது, பத்ம விபூஷண் விருது ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டன. அவரது மறைவையடுத்து திரை உலகினர், இசைத்துறையினர், பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆஷா போஸ்லே வாங்கிய விருதுகள்
பத்ம விபூஷண், தாதாசாஹேப் பால்கே விருது, 7 முறை சிறந்த பின்னணிப் பாடகி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, மகாராஷ்டிரா பூஷண் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
