‘தற்குறி கூட்டம்’.. தவெக தொண்டர்களை திட்டி கம்பால் தாக்க முயன்ற முதியவர்

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக கே.கே.நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிவக்குமார் என்ற முதியவர், தவெக தொண்டர்களை “தற்குறி கூட்டம்” எனத் திட்டி கம்பால் தாக்க முயன்றுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரச்சாரத்தின்போது சிவக்குமாரிடம் யாருக்கு வாக்களிப்பீர்கள் எனக் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதாக கூறப்படும் நிலையில் இருதரப்பு மீதும் அடிதடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED NEWS

Latest News