தொண்டர்களை ஏமாற்றிய விஜய் : எதுவும் பேசாமல் சென்றதால் பரபரப்பு

தவெக தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த விஜய், அங்கிருந்து தனது பிரசார வேனில் பயணித்தபடி காரைக்குடி சென்றார்.

காரைக்குடியில் 12.30 மணியில் இருந்து 2.30 மணி வரை மட்டுமே நேரம் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தாமதமாக விஜய் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வந்தார்.

அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டதால், விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், விஜய் அங்கிருந்து பேசாமல் புறப்பட்டு சென்றார்.

விஜய் பேசாமல் புறப்பட்டு சென்றதால், காலையில் இருந்து காத்துக்கிடந்த தவெக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Post

Latest News