‘இந்தியா தான் மிகவும் அசுத்தமான நாடு’ – நடிகை வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை

இலங்கை சுற்றுலா வீடியோவில் நடிகை ஷெனாஸ் ட்ரெஷரி இந்தியாவை குறித்து கூறிய கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஷெனாஸ் ட்ரெஷரி இலங்கையின் பிரபல சுற்றுலா பகுதியில் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் ‘இந்தியா தான் மிகவும் அசுத்தமான நாடு’ என கூறியுள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலை தளங்களில் கண்டனம் குவிந்து வருகிறது. சிலர் இந்தியாவின் பொது இடங்களில் சுகாதார குறைபாடுகள் உள்ளதாக விமர்சித்தனர். அதே நேரத்தில், இது முழு நாட்டையும் ஒரே மாதிரியாக மதிப்பிடுவது தவறு என மற்றொரு தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த வீடியோ காரணமாக இந்தியாவின் சுற்றுலா தரம், பொது சுத்தம் மற்றும் சமூக பொறுப்பு குறித்து விவாதம் எழுந்துள்ளது.

Related Post

Latest News