தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, மசூதிகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் திரண்டு உலக அமைதிக்காக சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
தலைநகர் சென்னையின் பெரம்பூர், ராயபுரம், அண்ணாநகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை திரளானோர் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
உலக மக்கள் அனைவரும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்ற கூட்டுப் பிரார்த்தனையுடன் இந்தத் தியாகத்திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
