அமைச்சரிடமே ரூ.4 ஆயிரம் லஞ்சம் : கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விரைவு தரிசனத்தின் பெயரில் பக்தர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரடியாக கோவிலுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்கள் போல சாதாரண பக்தராக கோவிலுக்கு வந்த அமைச்சரிடம் சில அர்ச்சகர்கள் ரூ.4 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்ய அமைச்சர் நேரடியாக மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் அவர் அமைச்சர் என்பது தெரியவந்ததும், பணம் பெற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து கோவிலில் நடைபெற்று வந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அமைச்சர் விசாரணை நடத்தினார். இதையடுத்து அர்ச்சக்கருடன் சேர்ந்து முறைகெட்டிற்கு உடந்தையாக இருந்த 2 பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல, முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட 2 பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Post

Latest News