உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் உள்ள தோரியா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவருக்கு சரோஜ், சாவித்ரி, சந்தோஷ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் ஆரம்பம் முதலே ஒரே வாலிபரைத் தான் திருமணம் செய்து கொள்வோம் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.
தங்களது விருப்பப்படியே, அங்குள்ள பிரபல சாமுண்டா கோயிலில் வைத்து அந்த வாலிபரை மூவரும் கரம்பிடித்தனர். இந்த சட்டவிரோதத் திருமண நிகழ்வில் உள்ளூர் பா.ஜ.க நகராட்சித் தலைவர் ஒருவர் கலந்துகொண்டது மேலும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. ஆரம்பத்தில் இதை ரீல்ஸ் வீடியோ என நினைத்தனர். பின்னர் அது உண்மை என தெரியவந்தது.
அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் “நாங்கள் 100 சதவீதம் உண்மையிலேயே திருமணம் செய்துகொண்டுள்ளோம். சேர்ந்துதான் வாழ்வோம், எங்களை யாரும் பிரிக்க முடியாது” எனத் தெளிவுபடுத்தினர். இந்த திருமணம் இந்தியச் சட்டத்திற்குப் புறம்பான திருணம் என இணையத்தில் கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.
