அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி – தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்

அதிமுகவின் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வந்தவர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவராகப் பொறுப்பு வகித்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருவது அதிமுகவிலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Latest News