மீண்டும் அதிரடி காட்டிய தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்று முதல் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13,140-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் சரசரவென உயர்ந்தது. இதன் மூலம் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,400-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,960 ஆக விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே அதாவது ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Post

Latest News