சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,870 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.960 அதிகரித்து ரூ.1,18,960 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
