அதிரடியாக குறைந்த தங்கம் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,630 க்கும் ஒரு சவரன் ரூ.1,17,040 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500 க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290 என்ற விலையிலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000 என்ற விலையிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Post

Latest News