தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,240 குறைவு

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, தற்போது தொடர்ந்து குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.13,950 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,200 குறைந்து ரூ.1,11,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ.2,240 வரை விலை குறைந்துள்ளது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Post

Latest News