NEET மறுதேர்வுக்காக இந்தியாவில் Telegram தடை! டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடிய நிறுவனம்

NEET UG 2026 மறுதேர்வை முன்னிட்டு இந்தியாவில் Telegram-க்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து Telegram நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது. NEET கேள்வித்தாள் கசிவு சர்ச்சை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ள NEET UG மறுதேர்வை பாதுகாப்பாக நடத்தும் நோக்கில், இந்திய மத்திய அரசு Telegram சேவைக்கு ஜூன் 22ஆம் தேதி வரை தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த நடவடிக்கை தேசிய தேர்வு முகமை (NTA) பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram நிறுவனத்தின் நிறுவனர் பாவெல் துரோவ் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சில மோசடி செய்பவர்களின் செயலுக்காக கோடிக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமல்ல என்றும், இந்த தடை மோசடியை நிறுத்தாமல் வேறு தளங்களுக்கு மாற்றியுள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த NTA அதிகாரிகள், சில சேனல்கள் VPN மூலம் இயங்கினாலும், இந்திய மாணவர்கள் அவற்றை எளிதில் அணுக முடியாத சூழல் உருவாகும் என்பதால், போலி கேள்வித்தாள்களுக்கு பணம் செலுத்தும் மோசடிகளை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

NEET 2026 தேர்வு முறைகேடு மற்றும் கேள்வித்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Telegram தாக்கல் செய்துள்ள மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு தற்போது கல்வி மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ள

Related Post

Latest News