குப்பை வேனுக்குள் இளம் பெண் சடலம்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலத்தில், குப்பைகளை சேகரிக்கும் வேனுக்குள் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில், மாநகராட்சி குப்பை வேன் ஒன்று குப்பைக் கிடங்கிற்கு வந்தது. அப்போது, அந்த வேனுக்குள் குப்பைகளுக்கு நடுவே சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கிடப்பதை அங்கு வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்கள் கண்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அந்தப் பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உயிரிழந்தாரா? எனப் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Latest News