குஜராத்தில் பயங்கர விபத்து: நின்ற லாரி மீது மோதிய சொகுசு பஸ்! 6 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

குஜராத்தின் சூரத் நகரிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ், வதோதரா மாவட்டத்தில் உள்ள வதோதரா–ஹலோல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பேருந்து வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி முழுமையாக நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் பல்வேறு காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த ஜரோத் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

Latest News