தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த ஜோசப் விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். திரைப்படங்களில் ஒரு படத்துக்கு பல கோடி ரூபாய் சம்பளம் பெற்றவர் தற்போது முதலமைச்சர் பதவியில் இருக்கும் அவருக்கு வழங்கப்படும் மாத ஊதியம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகளின்படி, முதல்வர் ஜோசப் விஜய்க்கு, மாதச் சம்பளமாக ரூ. 2,05,000 மட்டுமே வழங்கப்படுகிறது. இதில், மாதப்படி ரூ. 10,000, தொகுதிப்படி ரூ. 25,000, தபால்படி ரூ. 2,500, தொலைப்பேசிக்கு ரூ. 7,500, வாகனப்படி ரூ. 25,000 போன்றவையும் அடங்கும்.
இதையும் படிங்க : தவெக அரசின் புதிய அமைச்சர்களின் துறைகள் அறிவிப்பு
இதனுடன் பாதுகாப்பு, அரசு வீடு, மருத்துவ காப்பீடு, வாகன வசதி உள்ளிட்ட பல்வேறு அரசுச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அதோடு, குண்டு துளைக்காத சொகுசு கார்கள், அரசு வீடு, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான செலவுத்தொகை போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன.
சினிமாவில் ஒரு படத்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய விஜய், தற்போது மக்கள் சேவைக்காக அரசுப் பதவியில் குறைந்த தொகையை சம்பளமாக பெறுவது குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
