பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி : கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

சென்னையில் ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீரெனஉயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை எரிவாயு விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணங்களாக உள்ளன.

19 கிலோ எடையுடைய வணிக சிலிண்டரின் விலை நாடு முழுவதும் சுமார் 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 2,246.50 ஆக உயர்ந்துள்ளது. இது சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு கூடுதல் செலவாக மாறியுள்ளது.

மற்றொரு பக்கம், வீட்டு பயன்பாட்டிற்கான 14 கிலோ எடையுடைய சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது ரூ. 928 என்ற நிலைப்பாட்டில் தொடர்கிறது.

Latest News