இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான State Bank of India தனது SBI Credit Card பயனர்களுக்காக முக்கியமான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் மே 1 முதல் அமலுக்கு வருகிறது.
தாமதக் கட்டணங்களில் மாற்றம் :
இதுவரை ரூ.500 வரை நிலுவைத் தொகைக்கு தாமதக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் புதிய விதிமுறைகளின்படி:
ரூ.100 முதல் ரூ.500 வரை நிலுவை இருந்தால் ரூ.100 தாமதக் கட்டணம்.
ரூ.500 முதல் ரூ.1,000 வரை இருந்தால் ரூ.500 கட்டணம்.
ரூ.1,000-க்கு மேல் இருந்தால் பழைய கட்டண அமைப்பே தொடரும்.
மேலும், குறைந்தபட்ச நிலுவைத் தொகையை கூட செலுத்தாமல் விட்டால் தாமதக் கட்டணம் விதிக்கப்படும். நிலுவைத் தொகை முழுவதும் அடைக்கப்படும் வரை இந்த கூடுதல் கட்டணம் மாதந்தோறும் தொடரும்.
இதையும் படிங்க : சில நிமிடங்களிலேயே அதிவேக டெலிவரி – அமேசான் புதிய திட்டம்
கார்டு மூலம் கிடைக்கும் சலுகைகளிலும் மாற்றம்:
‘Cashback’ மூலம் கிடைக்கும் புள்ளிகள் 90 நாட்களில் காலாவதியாகும். ‘Instant Discount’ மூலம் கிடைக்கும் புள்ளிகள் 120 நாட்களில் காலாவதியாகும்.
கவனிக்க வேண்டியவை :
இந்த மாற்றங்கள் சிறியதாக தோன்றினாலும், கவனிக்காமல் விட்டால் தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தும். கடைசி தேதிக்குள் குறைந்தபட்ச தொகையாவது செலுத்துவது முக்கியம். reward points காலாவதியாகாமல் பயன்படுத்த வேண்டும். ஆண்டு கட்டண சலுகை பெறும் அளவிற்கு செலவு திட்டமிட வேண்டும்.


