மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி சேமிப்பை பாதுகாக்க மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
உள்நாட்டு பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் வெள்ளி கட்டிகள் மீது புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 99 சதவீதம் வரை தூய்மை கொண்ட வெள்ளி கட்டிகளை இந்தியாவிற்குள் கொண்டு வர அரசு முன் அனுமதி அவசியம்.
இந்த நடவடிக்கை, தேவையற்ற இறக்குமதிகளை குறைத்து ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தும் என கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் வெள்ளி இறக்குமதி மதிப்பு கணிசமாக உயர்ந்ததுடன், தங்க இறக்குமதியும் பல பில்லியன் டாலர்களை எட்டியது.
சமீபத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியும் உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது வெள்ளி இறக்குமதிக்கு நேரடி அனுமதி முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
