போளூர் மண்ணின் புதிய நம்பிக்கை ஆர். அபிஷேக் குமார்

திருவண்ணாமலை மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான போளூர் சட்டமன்றத் தொகுதியில், தன்னை போன்றே இளமையும் துடிப்பும் மிக்க வேட்பாளராக திரு. ஆர். அபிஷேக் குமாரை களம் இறக்கியுள்ளார் தமிழக வெற்றிகழக தலைவர் தளபதி விஜய் அவர்கள்!

”மாற்றம் என்பது ஒரு நபரால் தொடங்குவதில்லை, அது ஒரு வாக்கால் தொடங்குகிறது என்பார்கள். அதை களத்தில் உணர்ந்ததால், திரு. ஆர். அபிஷேக் குமார் அவர்கள், தொகுதி முழுவதும் சூறாவளி பயணம் செய்து வாக்குகளை சேகரித்து வருகிறார்!

சீழ் பிடித்த பழைய அரசியலில் இருந்து போளூரை மீட்டெடுக்க வந்திருக்கும் ஒரு அறிவார்ந்த குரல் இவர். சாதாரணப் பின்னணியில் இருந்து தன் உழைப்பால் உயர்ந்தவர். போளூரின் மூலைமுடுக்கெல்லாம் திரு ஆர். அபிஷேக் குமார் அவர்கள் மேற்கொண்டு வரும் நேரடிப் பயணம், தொகுதி மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராமம் தோறும் இளைஞர்களும் முதியவர்களும் இவரை மாற்றத்தின் நாயகனாக கருதி வரவேற்கிறார்கள். ஊழல் அரசியலில் இருந்து எங்களை மீட்டெடுங்கள் என கோரிக்கை வைக்கிறார்கள். போளூரில், எங்கள் நம்பிக்கை இனி நீங்கள் தான் என அன்பு காட்டுகிறார்கள்.

முந்தைய சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பலமுறை ஊழல் புகார்களும், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளும் எழுந்ததுண்டு. ஆனால் இவர், சுத்தமான அரசியலை முன்வைக்கிறார். ஊழலற்ற, லஞ்சமற்ற மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதே இவரது பிரதான நோக்கம்.

போளூரில் இதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட பலரும் தேர்தல் வரும்போது மட்டும் தான் மக்களை தேடி வருவார்கள்.
மீண்டும் வாக்குறுதிகள் அளிப்பார்கள். அப்புறம் காணாமல் போய்விடுவார்கள், ஆனால் அபிஷேக் அணுகுமுறை இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. போளூரை உலக அளவில் உயர்த்திப்பிடிக்கும் கனவு அவருக்குள் கனன்று கொண்டிருக்கிறது.

விவசாய பூமியான போளூரின் வளர்ச்சி முடங்கி கிடப்பதை கண்ணீருடன் மக்கள் விவரிக்கிறார்கள். விளைபொருட்களுக்கு நியாயமான விலை மற்றும் நவீன குளிர்சாதனக் கிடங்குகள் அமைப்பதற்கான இவரின் திட்டம் சோர்ந்து கிடக்கும் விவசாயிகளுக்குப் பெரும் நம்பிக்கை அளிக்கிறது. சீரமைக்கப்படாத சாலைகள், குடிநீர் தட்டுப்பாடு, பாழடைந்து போன அரசுப்பள்ளி கட்டிடங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் செயல்திட்டம் வாக்காளர்களை கவர்ந்திருக்கிறது.

மாற்றத்தை விரும்பும் முதல்முறை வாக்காளர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவருமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நேர்மையான அரசியலையே விரும்புகிறார்கள். அவர்களிடம், தான் ஒரு சிறந்த ‘ரோல் மாடல்’ ஆக இருப்பேன் என உறுதி அளித்து வாக்கு சேகரித்து வருகிறார். தளபதியின் தம்பி, நம்ம வீட்டுப் பிள்ளை என இளைஞர்கள் அளிக்கும் வரவேற்பு மாற்றத்துக்கான நல்ல தொடக்கம் என்கிறார் அவரும்.

போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைப்பதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு வலுசேர்ப்பேன் என்கிறார்.

சென்னை போன்ற நகரங்களுக்குப் பிழைப்புத் தேடி செல்வதை தடுக்க, போளூரிலேயே சிறு மற்றும் குறுந்தொழில் முனையங்களை உருவாக்கத் திட்டம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கொடுப்பது, இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல் , ஊழலற்ற நிர்வாகம், அனைத்து திட்டங்களையும் மக்களே கண்காணிப்பது என ஒரு புதிய நிர்வாக முறையை அவர் வலியுறுத்துகிறார். போளூரில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் வளர்ச்சி, ஒவ்வொரு மனிதருக்கும் வாய்ப்பு” என்பதே அவரது தாரக மந்திரமாக இருக்கிரது.

கையில் பட்டமும், மனதில் மாற்றத்திற்கான கனவும் கொண்ட ஒரு இளைஞனிடம் அதிகாரம் கிடைத்தால், அது அந்தத் தொகுதியின் தலையெழுத்தையே மாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை. இத்தனை காலம் ஆண்ட கட்சிகள் செய்யத் தவறியதை, ஒரு படித்த இளைஞராகச் செய்து காட்டத் துடிக்கிறார் திரு. ஆர் அபிஷேக் குமார் அவர்கள். ஆம்! மாற்றம் போளூரிலிருந்தே தொடங்கட்டும்!

Latest News