இந்திய சொகுசு கார் சந்தையில் Lexus ES 350h மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த புதிய கார், ஹைபிரிட் தொழில்நுட்பம், அதிக இடவசதி, புதிய வடிவமைப்பு மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. புதிய ES 350h-ன் ஆரம்ப விலை ரூ.66.10 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் மாடலின் விலை ரூ.71.80 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய ES 350h, Lexus மூலம் பயணிகளுக்கு கூடுதல் இடவசதி, வசதியான பயண அனுபவம் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள சாலைகளின் நிலைமையை கருத்தில் கொண்டு தரையிலிருந்து வாகனத்தின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும். இதில் 14 அங்குல உயர்தர டச் ஸ்கிரீன், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புதிய மல்டிமீடியா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் புதிய எல் வடிவ LED விளக்குகள் மற்றும் பின்புறத்தில் எளிமையான நவீன வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த கார் ஆறு நிறங்களில் கிடைக்கிறது. மேலும், இந்த காருக்கு 2 லட்சம் கிலோமீட்டர் வரை வாகனம் மற்றும் ஹைபிரிட் பேட்டரிக்கான வாரண்டி வழங்கப்படுகிறது.
Lexus நிறுவனத்தின் இந்த புதிய ES 350h, சொகுசு செடான் பிரிவில் ஹைபிரிட் தொழில்நுட்பம், மேம்பட்ட பாதுகாப்பு, நவீன வசதிகள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனம் என்ற பல்வேறு சிறப்புகளுடன் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் புதிய தேர்வாக இது உள்ளது.
