சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இந்தியாவில் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
குறிப்பாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே வணிக சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் நேரடி விளைவாக, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 993 ரூபாய் வரை உயர்ந்து, தற்போது 3,239 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏதுமின்றி 928.50 ரூபாயாகவே நீடிக்கிறது.
விடுதி கட்டணங்கள் உயர்வு
வணிக சிலிண்டர் விலை ஏற்றம் விடுதி மற்றும் மேன்ஷன் உரிமையாளர்களைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள விடுதிகள் மற்றும் பி.ஜி (PG) தங்குமிடங்களின் கட்டணத்தை உயர்த்த ‘விடுதி மற்றும் பி.ஜி. உரிமையாளர்கள் சங்கம்’ முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க : OTP வழங்கினால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும் : புதிய நடைமுறை அமல்
விலை உயரும் அபாயம்
வரும் மே 5-ஆம் தேதி முதல் புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. தங்குமிடங்களில் உள்ள கூடுதல் வசதிகளுக்கு ஏற்ப கட்டண உயர்வு மாறுபடும்.
வணிக சிலிண்டர் விலை உயர்வால் விடுதி கட்டணங்கள் மட்டுமின்றி, உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இது நடுத்தர வர்க்கத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


